டிக்டொக்கில் திடீரென களமிறங்கியுள்ள ட்ரம்ப்!

Spread the love

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டிக்டொக் கணக்கொன்றை ஆரம்பித்துள்ளார்.

தற்போது வரை 30 இலட்சத்திற்கும் அதிகமானோர் அவரைப் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், டிக்டொக் செயலிக்கு தடை விதிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்தநிலையில் தற்போது அவரே டிக்டொக்கில் இணைந்துள்ளமை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தேர்தல் பிரசார உத்திக்காக டிக்டொக்கில் இணைந்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.