பொதுவேட்பாளர் யோசனையை நிராகரித்தார் சம்பந்தன்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்ற யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நிராகரித்துள்ளார்.
“ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரலவலான ஆதரவு கிடையாது.
மேற்படி முயற்சியானது தமிழ் மக்களுக்கான சதகமான நிலைமைகளை உருவாக்கும் என் நான் கருதவில்லை.” எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்துக்கு சில தமிழ் தேசியக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரதான கட்சியான தமிழரசுக்கட்சி இது தொடர்பில் எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளது. சம்பந்தனின் நிலைப்பாடும் இதனையே பிரதிபளிக்கின்றது.