இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
கடந்த வாரத்தில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 8 சதவீதத்தினால் வலுவடைந்துள்ளது.
அத்துடன், ஏனைய நாணய அலகுகளுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, ஜப்பானிய யென்னிற்கு நிகராக 15.5 சதவீதமும், ஸ்ரேலிங் பவுண்ட்ஸிற்கு நிகராக 9 சதவீதமும், இந்திய ரூபாவுக்கு நிகராக 8.5 சதவீதமும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.