மஹிந்த, துமிந்த, லசந்தவின் பதவிகள் பறிப்பு: மைத்திரி அதிரடி!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் வகிக்கும் பதவிகளில் இருந்து அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீரவும், தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து துமிந்த திஸாநாயக்கவும், பொருளாளர் பதவியில் இருந்து லசந்த அழகியவன்னவும் நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக புதியவர்கள் அப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக்கட்சியின் விசேட கூட்டம் இன்று அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போதே இவர்கள் மூவரும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனினும், கட்சியின் இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.